அளவுக்கு மீறிய அன்பை
நீ யார் மேலாவது வைத்தால்
உயிரோடு இருந்து கொண்டே
நீ மரணத்தை அனுபவிப்பாய்
எல்லை தாண்டி அன்பை
நீ எவரிடமாவது எதிர்பார்த்தால்
நீ வாழும்போதே நரகத்தை உணர்வாய்.
இந்த உலகில் எதிரியால்
வீழ்ந்தவனை விட,
அன்பினால் வீழ்த்தப்பட்டவன்
தான் அதிகம்
உண்மையான அன்பு மிருகத்தையும்
மனிதனாக்கும் வல்லமை கொண்டது.
பொய்யான அன்பு மனிதனையும்
மிருகமாக்கும் வன்மம் கொண்டது.
அன்பு கிடைப்பது “வரம்”.
அன்பு கொடுப்பது “புண்ணியம்”.
நாம் “புண்ணியம்” செய்வோம்.
கேட்ட “வரங்கள்” நமதாகும்.

No Comment! Be the first one.