வாழ்வதற்கு பணம் தேவையாக இருக்கிறது:
பணம் சம்பாதிக்கவோ, நீ, உன் வாழ்ககையையே
தொலைக்க வேண்டியிருக்கிறது.
இது ஒரு பொல்லாத வளையம்.
நீ வாழ வேண்டுமென்றால் உனக்கு பணம் தேவை,
பணம் வேண்டுமென்றால் பலதோடும்
ஒத்துப்போக வேண்டியுள்ளது.
அதன் பிறகு வாழ்வதற்கு உன்னிடம்,
வாழ்க்கை இருக்காது.
பணம் இருக்கும் கூடவே நோயும் இருக்கும்.
மருத்துவத்திற்கு பணம் தேவை
ஆக பணமும் இல்லை – குழப்பம்
சில வருடங்கள் இந்த வேலையைச் செய்தபின்,
ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்
என்று மக்கள் நினைக்கிறார்கள்
முப்பது வருடப் பழக்கமான
‘நாளை ‘யும் உன் கூடவே இருக்கும்.” திடீரென அதைவிட முடியாது.
அது உன்னுடனே தங்கி இருக்கும்.
இப்போது நீ சிக்கிக் கொண்டாய்.
இதுவரைக்கும் ஒரு நம்பிக்கையாவது இருந்தது.
இனி, அந்த நம்பிக்கைக்கும் வழியில்லை.
அவனுக்கு,ஒரே மாதிரிதான் வாழத்தெரியும்…’
நாளைக்கு வாழ்ந்து கொள்ளலாம் ‘ என்பதே அது”
ஓய்வு பெற்றவர்கள் பலர் சீக்கிரம் இறந்து விடுகிறார்கள்.
வேலையில் இருந்திருந்தால் இன்னும்
பத்து வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள்.
எந்த வேலையில் எப்போதும் துன்பத்துடன் இருந்தார்களோ
அதே வேலையை தொடர்ந்திருந்தால்
இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள்.
ஒவ்வொரு நாளையும்
மகிழ்ச்சியாய் அனுபவிப்போம்
No Comment! Be the first one.