அழுது நீ கோழையாகாதே!
உனக்கு நண்பன் நீயே!
உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்?
நீயே உன் காவலன்….
ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!
உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்!
ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே….!
* இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு.
* ஒரு மனிதனின் அதீத அன்பானது தாயிடம் மட்டுமே உள்ளது..
* இழப்பு அல்லது பிரிவின்றி எவரும் ஒன்றின் அருமையை உணருவதில்லை.
* நிஜங்கள் பலவற்றை கண்ணெதிரே தொலைத்து விட்டு இருளெனும் கனவில் தேடுகிறேன். நீண்ட நாட்களாக, பல மாதங்களாக, சில வருடங்களாக….
* கல்லைச் சலவை செய்யும் மழையே இந்த மனிதனின் மனதையும் ஒரு முறை சலவை செய்து விட்டு செல்வாயா?.
* கோபம் வருகின்ற பொழுது வார்த்தையின் அளவுகள் அதிகரிக்கின்றன. அன்பானவர்களைக்(அன்பானவரைக்) கூட எதிர்த்து விடுகின்றது..
* கெட்டவனாக இருந்து கொண்டு நல்ல பெயர் எடுப்பதைவிட.. நல்லவனாய் இருந்து கெட்ட பெயர் எடுப்பது எவ்வளவோ மேல்..
* தந்தையின் நம்பிக்கை இருக்கும் வரை தனயன்(மகன்) வழிதவறான்.
தாயின் அன்பு இல்லையானால் தனபதியாய்(குபேரன்) இருந்தும் பயன் இல்லை.
* வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும்
No Comment! Be the first one.