கிட்டத்தட்ட ஆண்டு 1974 என சொல்லப்படுகிறது எமது ஆனையூர் இளைஞர் பலர் ஒன்று சேர்ந்து ஒரு நகைச்சுவை நாடகத்தை மேடையேற்றிய காலம் அது. அவ்வாறு ஒரு கதை தான் பெற்றாள் தான் பிள்ளை என்ற நகைச்சுவை நாடகம், அமரர் அன்ரன் மாஸ்ரர் தலைமையில் உருவாக்கப்பட்டு , மேடையேற்ற ஐக்கிய சன சமூக நிலைய ஒப்புதலுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நாடகத்தலையங்கம் அந்த குழுவின் அனுமதியுடன் மதிப்பிற்குரிய அப்போதைய தலைவர் றஞ்சன் அவர்களால் மாற்றப்பட்டு எடடி கருக்குமட்டைய பிடியடி இடுப்பில என தலைப்பு மாற்றம் பெற்று மேடையேற்ற அனுமதி அன்று வழங்கப்படுகிறது.
அந்த நாட்கள் ஆனையூர் அனைத்து நிர்வாகங்களும் ஐக்கியசனசமூக நிலையத்தின் கிழ் இயங்கிய காலம் அது. இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நாடகத்தை அமரர் டேவிற் அவர்கள் பிரதான பாத்திரம் ஏற்று எமது ஊரில் மேடையேற்றினார்கள். அதன் மூலம் சேகரித்த சுமார் 900 ரூபாய் காசை சன சமூக நிலையத்திடம் ஒப்படைத்தனர் அந்த இளைஞர்கள்.
ந்த காலத்தில் தான் சந்தியில் மாதா திருச்சுருபம் ஒன்று நிறுவ இந்த இளைஞர்கள் சிந்தனை துண்டியது .
அதன்படி மாதாவின் திருச்சுருபம் அமைந்துள்ள காணி உரிமையாளரிடம் அனுமதியைப் பெற்று இவர்கள் நாடகம் மூலம் சேர்த்த காசை இந்த பொது தேவைக்கு தரும்படி சனசமூக நிலையத்திடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்ற சனசமுக நிலையம் சனசமுக நிலைய பொதுக்கூட்டத்தில் அந்த 900 ரூபாயும் இவர்களுக்கு வழங்க அனுமதி கொடுத்தது.
இவ்வாறு பெற்ற காசை கொண்டு
அமரர் அன்ரன் மாஸ்ரர் ,டேவிற் , அல்பி,
போன்றவர்களும் மதிப்பிற்குரிய யோகம், தனபாலு போன்ற இன்னும் பல இளைஞ்ஞர்கள் சேர்ந்து முதல்
முதலாக இந்த சந்திமாத திருச்சுருபத்தை
எமது ஊரில் உருவாக்கினர்.
மாதா கூடும் மெழுகுவர்த்தி தட்டும் மட்டும் தான் அரம்ப வடிவமாக இருந்தது.
அதன் பின்னரே மாதா சந்தி என மக்களினால் பெயர் கூறி இந்த சந்தி அழைக்கப்பட்டது.
தொடர்ந்து பல கட்ட புனரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு இன்று இவ்வாறு அழகாக அன்னை காட்சி தருகின்றாள் இந்த சந்தியில்.
எம் ஊரைவிட்டு வெளியேறுவோர் பலரும்
அன்னை முகம் பார்த்து தாயே என வணங்கிச் செல்வது இப்போதைய மரபு .
(மேலதிக தகவல் தெரிந்தால் தெரிவியுங்கள் குறிப்பாக ஆண்டு ,மாதம் திகதி )
ஆனையூரான்
No Comment! Be the first one.