ஆனையூரை உம் வாழ்கைச்
சிறகுகளால் பறந்தே கடந்த
பறவை மகேஸ்வரி ஆசிரியர்
நீர் இளைப்பாறி
எத்தனித்து
இறை பயணியை
முடித்துக் களைப்புற்ற
உம்மை ஆசுவாசப்படுத்திட
மரக்கிளையொன்றைப்
பற்றியமர்ந்திருக்கிறீர் அதுவும் ஆனையூர் மண்ணில்
இன்று இப்போது
இதோ இத்தருணத்தில்…
தன்னம்பிக்கைப்
பறவையே!-நீர்
பெரும் வரலாற்றை
பறந்து கடந்தாலும்
அதில் நீர் சாதித்துப்போன உமது
ஞாபக இறகுகள்
எங்கள் நினைவுகளில் ,எம் மண்ணில்
அழகிய ஓவியங்களாக
நிழலாடுகிறது
ஆலயம் புணரமைத்தல்,மறைக்கல்வி கற்பிப்பது,மாதா கூட்டம், மரியாவின் சேனை,செபம், தவம் என பல
ஃபீனிக்ஸ் பறவையே.
உயர்ந்த இலட்சியம்
கொண்டவர் நீங்கள்
ஆடைகல நாயகி கூட்டில்
அக்னி முட்டைகளை
அடைகாக்கப்
புறப்பட்டீர்
அடைகாத்து ஆகாயத்தில்
பறக்கவிட்ட
அக்.கினிக் குஞ்சுகள்தானே
நாங்கள்
ஆகாயவெளியில்
அறியாமை இருளகற்றும்
நட்சத்திரப் பறவைகளாய்
மிளிர்கின்றோம்
வெறும் மாணவன் எம்மை மறை அறிவாள்
மாண்பிற்குரியவனாய்
மாற்றிய
மாபெரும் சாதனையாளர்
நீங்கள்!..
தாய்க்கே உரிய
அன்புள்ளம்
தந்தைக்கே உரிய
வழிகாட்டலும் வீவேகமும்
ஒருங்கே பெற்றவர் நீங்கள்!
அறப்பணியாம்
ஆசிரியப் பணியின்
வாழ்நாள் சாதனை அன்னையே!
பறந்து களைப்புற்ற
உம் சிறகுகளின்
இளைப்பாறுதலுடன்
எங்களுக்கு
வழிகாட்டியாக இருப்பீர்,பறப்பீர்
நலம் பல பெற்று
நூறாண்டு தாண்டி
வாழ்க வளமுடன்
என்று நான்
உம்மை வாழ்த்த வயதுற்ற தகுதி இல்லை
ஆதலால் நீர்
என்றென்றும்
வாழ்வாங்கு வாழ
ஆடைக்கல ஆச்சியை வேண்டுகிறேன்
தமிழ் புரவலன் ஆனையூர்
No Comment! Be the first one.