அன்பை பிச்சை எடுக்க கூடாது
அக்கறையை கேட்டு வாங்க கூடாது
காதலை கெஞ்சி பெறக் கூடாது
உணர்வுகளை புரிய வைக்க கூடாது
ஒவ்வொரு முறையும் அன்பை
நிருபித்துக் கொண்டே இருக்க
முயற்சி செய்யாதீர்கள் அது
தற்கொலையை விட கேவலமானது
எதையும் மறக்க முயற்சித்து
நிம்மதியை இழக்காதீர்கள்
அதை அதை அப்படியே
விட்டு விடுங்கள்
காலம் மாற்றிவிடும்
ஒரு பிரச்சனை என்றால்
சூழ்நிலை மட்டும் நினைக்காதீர்கள்
சில நாய் வேடமிட்ட நரிகளின்
சூழ்ச்சியாக கூட இருக்கலாம்
முகத்தை மூடினாலும்
மனதைத் திறந்து வை
நல்லெண்ணெம் நுழைவதற்கு
பலம் இருக்கின்றது என்று
எதிரியையும்
பணம் இருக்கின்றது என்று
செலவையும்
சம்பாதிக்க கூடாது

இந்த உலகம் உன்
முயற்சிகளை கவனிக்காது
முடிவுகளை தான் கவனிக்கும்
சிந்தித்து செயல்படுங்கள்
No Comment! Be the first one.