கடைசிகாலத்திற்கு தேவைபடும்
என்று, ஓடி ஓடி உழக்கிறோம்!
எது கடைசி காலம் என்று தெரியாமலேயே!
காலம் என்றுமே நம் கேள்விக்கு
விடைக் கொடுப்பதில்லை!
பதில் கிடைக்கும் என்று நம்மை
நாமே பழக்கிக் கொள்கிறோம்!
காலம் போடும் கணக்கை கடவுளை
தவிர வேறுயாரும் அறிவாரில்லை!
கடமையை செய், கடவுளை நினை…
நடப்பதெல்லாம் நன்மைக்கே!
நேரத்தை குறைக்க முடியாது!
பாரத்தை மறைக்க முடியாது!
நேரம் நகர நகர பாரமும் நகர்ந்தே தீரும்! காத்திரு!
சென்று கொண்டிருப்பவன்,
காலத்தை வென்று கொண்டிருக்கிறான்.
நின்று கொண்டிருப்பவன்,
காலத்தை தின்று கொண்டிருக்கிறான்!
தீர்க்க முடியாத சில பிரச்சினைகளுக்கு
எதுவுமே செய்ய வேண்டாம்.
அமைதியாக இருந்து விடுங்கள்,
காலம் இதனை தீர்த்துவிடும்!
No Comment! Be the first one.