வாய்ப்பாடுகளை புரட்டும்
பாரம்பரியம் சொல்லுமவன்
மேனிவிட்ட நீரின் கனதி பட்டமே சட்டம்பியார் !!
கொடையால் சினேகம்
பற்றும் பகலவன்
அந்திம காலம் வரை
ஆனையூர் மேட்டுகாரன்!!
ஆதிமுதல் அடைக்கல அன்னையின்
நிஜமாகவும் நிழலாகவும்
தோள்கொடுக்கும் நற் பெரும்
தலைமை ஆசான்!!
சைமன் தந்த சொர்க்கத்தங்கம் அப்பு
நீ இல்லை எமக்கு ஒரு ஆலயம் இல்லை ,
இறைமக்கள் இல்லை ,
விசுவாசப் பங்குகளும் இல்லை!!!
தான் குடியிருந்த காணியில்
அன்னையை குடியிருத்தி
அழகுபார்த்த பாரிய சோழன்
வெற்று காணியாம் விளாத்தியடியில்
புது வீடு புகுந்தவன்!!
இந்துகளிடன் காணி பெற்று
இறை விசுவாசம் வளர்த்தவர்
ஆனையூர் சின்னத்தம்பி
தலைமகன்!!
இன்று நாம் பல மில்லியன் பணக்காரர்
பாலர் பாடசாலைக்கு
துண்டு காணி
இடா யாசகக்காரர்களும் நாம் !!!
கடல் கடந்து நாடு சென்று
ஓடு ,மரம் காவி கூடுசேர்த்து
கோவில் கட்டிய
ஆனைக்கோட்டை ஆண்ட மன்னன்!!
நில அளவை,மதம்,கடல் வணிகம் அனைத்தும்
புரையோடி அலசிப் பார்த்த
ஆனையூர் அறிவாக்கம் றப்பியேல்!!
ஆங்கிலேயரை மேய்த்து வீரத் தமிழன்
லண்டன் அரசனிடம் தங்கப்பதக்கம் பெற்ற புனிதன் ,
100வருடம் கழித்து
உம் பூட்டன் ஜோச் சந்திரகுமாருக்கும்
தங்க விருது எம் பெருமை!!
ஊருக்கு சேமக்காலை காணி பெற்றாய்,
கடற்கரை காணி வென்றாய்
உம் வரலாறு சொல்ல என் பேனா மை போதாது!!
நீ இறக்கும் போது
ஒரு துண்டு நிலம் உனக்கில்லை
அதனால்
எம் தலைக்கு நீ முன்னோடி!!
இருவருக்கும் ஒரு ஒற்றுமை
பூர்விக இந்துகள்
பிறப்பால் கிறிஸ்தவர்கள்
மணப்பாலும் இந்துகள் ஜயா
தமிழ்புரவலன் ஆனையூரான்
No Comment! Be the first one.