உள்ளும் புறத்தும் எல்லா விடத்தும்
இருக்கும் பேரொளியாள்
கொள்ளும் மனத்தில் குதிரும் அன்பில்
கூடும் மதியழகாள்!
சொல்லும் ஜெபத்தை சொல்லக் கேட்டு
சுலப வழித்தருவாள்
வல்லாத் துன்ப வலிகளுக் கெல்லாம்
வடிய மருந்திடுவாள்!
நாடுவர் மனதில் கூடுவ தென்பது
நாயகி பெருந்தன்மை
தேடுவர் தேடலில் தேடிய தாவது
தேவத்திரு மெய்மை!
பாடுவ தவளை பள்ளி யெழுப்ப
பாடிடு மாதாவை
மூடுவள் வருமுன் முட்டும் கேட்டினை
முன்பணி உன்தேவை!
ஆனையூரான்
No Comment! Be the first one.