அறிவும் தெளிவும் ஆக்கநற் குணமும் வறுமை நீங்கிய வாழ்வின் வளமும் உரிய செல்வமும் உறவின் பலமும் செறிவுறக் கிட்ட செய்பவள் மாதா! அண்டுவர் மனதில் அகற்றி பயத்தை கொண்டுத் துணிவை கோலோச்ச வைக்கும் அன்னையின் மகிமை அருட்கொடையன்றோ! தன்படைப் பனைத்தும் தழுவிட சுகத்தை மண்பதை மீது மாதா செயலும் கண்பட அவளின் கருணை மழையால் தென்படும் மானிடத் தேடலில் எல்லாம்! அன்னை மேரியின் ஆலயம் சென்று உன்னடைக் கலத்தை உரப்பித்தாலே தின்ன முந்தன் திசையிரு லகலும் திருப்ப வெளியில் தீபம் ஒளிரும்! ஆனையூரான்
No Comment! Be the first one.