நம்மை யார் என்று நமக்கே
தெரியப்படுத்த
தேவைப்படும் ஒன்று
தான்.. அவமானம்.
வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால்
தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்
ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால்
தடுக்கிவிட பலரும் இருப்பார்கள்
நேசிக்க யாரும் இல்லை என
யோசிக்க வைக்கிறது வாழ்க்கை
நேசிக்க அன்பு வரும்பொழுது
அதை நினைக்க மறந்துவிடுகிறது
போராடி வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல
அது பூ வனம்
ரசித்து வாழ்வோம்
வெற்றி பெற்றவர்கள்
தோல்விக்காக காத்திருக்கிறார்கள்
தோல்வி கண்டவர்கள்
வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்
இதுதான் வாழ்க்கை
சிரிக்கும் போது
வாழ்கையை வாழ
முடியும் ஆனால்
அழும் போது மட்டுமே
வாழ்கையை புரிந்து
கொள்ள முடியும்
தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை
செய்யும் தவறு வெளியே தெரிய கூடாது
என்றே பயப்படுகிறார்கள்
குணத்தைப் பற்றி சொல்ல ஆள் இல்லை
குறை சொல்ல ஊரே உள்ளது
உழைத்த காசிற்க்கு
மட்டும் கையேந்து
மற்ற எதற்கும்
எவரிடமும் கையேந்தாதே
எல்லா தத்துவங்களும் இளமையிலே வாசிக்கக் கிடைக்கிறது
ஆனால், அதை பின்பற்ற முதுமை வரை போராட வேண்டியிருக்கிறது
No Comment! Be the first one.