மனதைத் தூய்மைப் படுத்து-அது
மாதா வாழும் ஆலயம்
உனது வாய்மை யதனில்
உயர்ந்து நிற்கும் கோபுரம்!
இரக்கம் அன்பு பாசம்–உன்
இலட்சிய தீபச் சுடரது
இலக்கை அடைய நேர்வழி
இதுவே சாலச் சிறந்தது!
அன்னை மனதின் சாந்தம்–உன்
அறவழி செயலில் இருக்கு
கண்ணில் கருணை பெருக்கு
கன்னிமாதா மனதை உருக்கு!
மண்ணில் மனிதப் பிறப்பு–மாதா
மகிழ்வாய் தருகிற சிறப்பு
எண்ணி நடக்க வியப்பு
இதுவே விதியின் பதிப்பு!
ஆனையூரான்
No Comment! Be the first one.