அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு
எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல
எதிரி இல்லையென்றால் சண்டை இல்லை;
சண்டை இல்லையென்றால் வெற்றி இல்லை;
வெற்றி இல்லையென்றால் மகுடம் இல்லை.
ஆரோக்கியத்தை பெற்றுள்ள
ஒருவர் நம்பிக்கையை பெற்றுள்ளார்;
நம்பிக்கையைப் பெற்றுள்ள
ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார்.
அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு
எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல.
அதைக் கொண்டு அவன் என்ன
செய்கிறான் என்பதே முக்கியம்.
தனது இலக்கினை அடைவதற்கான
சரியான அணுகுமுறை
கொண்ட ஒருவனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது;
தவறான அணுகுமுறை கொண்ட ஒருவனுக்கு
இந்த பூமியில் எதுவும் உதவ முடியாது.
இரண்டு வார்த்தைகளில்
சொல்லவேண்டிய விடயத்தை ஒரே
வார்த்தையில் சொல்ல முடிந்தால்
அதுதான் விலைமதிக்க முடியாத திறமை.
உங்களுக்கு ஒரு நல்ல மனைவி
அமைய வேண்டுமென்றால்,
ஒருவருக்கு நல்ல மகளாக வாழும்
ஒருவரை திருமணம் செய்துகொள்ளுங்கள்.
மின்மினிப்பூச்சி பறக்கும்
போதுதான் பளபளக்கிறது.
மனிதன் சுறுசுறுப்போடு
இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.
ஒருபோதும் தவறே செய்யாத ஒருவன்,
ஒருபோதும் எதையும் செய்யப் போவதில்லை.
ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை,
வாழும் முறையில்தான் இருக்கிறது.
No Comment! Be the first one.