எரிகிற விளக்காக இரு அப்போதுதான்
மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்
எதிர்காலத்தை எண்ணி
அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம்.
பெரிய எண்ணங்களை சிந்தனை செய்;
ஆனால் சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு.
தவறவிட்ட வாய்ப்பை விட அதிக மதிப்புடைய
விஷயம் வேறு எதுவுமில்லை.
வருத்தமோ, துன்பமோ இன்றி எவராலும்
எளிதில் புகழ்பெற முடியாது.
உலகிலேயே மிகப் பெரிய சுமையாக
விளங்குவது மூட நம்பிக்கைதான்.
எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம்
இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.
திருப்தியான மனம் ஒன்றே மனிதர்களுக்குகிடைக்கும்
மிகப்பெரிய கொடை.
தனது செயலில் தயக்கம் உடைய ஒருவர்
அதில் இழப்பையே சந்திக்கிறார்.
விதியை எள்ளி நகைப்பவனே வெற்றிகள்
பலவற்றைக் காண்பான்.
வெற்றியின் உண்மையான ரகசியம் எடுத்த
காரியத்தில் உறுதியாக நிற்பதே.
நேரத்தை இலாபமாக அடைபவர்களுக்கு
எல்லாமே இலாபம்தான்.
பகைவனை அடக்குபவனைவிட
ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.
செயல்கள் சில நேரங்களில்
மகிழ்ச்சியைக் கொடுக்காது.
ஆனால் செயலின்றி மகிழ்ச்சியில்லை.
மனிதன் எப்பொழுது ஆர்வத்திலிருந்து செயல்படுகிறானோ
அப்பொழுது மட்டுமே அவன் சிறந்தவனாகிறான்.
தவறுகள் அல்லது தோல்விகள் என்று எதுவுமில்லை,
பாடங்கள் மட்டுமே உள்ளன
No Comment! Be the first one.