நீங்கள் புதிதாக ஒன்றை
முயற்சிக்கும் போது
“நீ ஒரு முட்டாள்” என்ற
வார்த்தையை அதிகம்
எதிர்கொள்ள தயாராகுங்கள்..!
கேள்விகளை கேட்பவன்
ஐந்து நிமிடம் முட்டாள்..
கேள்வியே கேட்காதவன்
வாழ்நாளில் எப்போதுமே
முட்டாளாக இருப்பான்..!
ஒன்று உங்களுக்கு
முக்கியமென்றால்.. தோல்விக்கே
அதிக வாய்ப்பு என தெரிந்தாலும்..
அதை நீங்கள் செய்ய வேண்டும்..!
உச்சகட்ட போர்க்கலை என்பது..
சண்டையே இல்லாமல் எதிரியை
அடிபணியச் செய்வது ஆகும்..!
நாம் காலம் கடத்தும் போது
வாழ்க்கை வேகமாக
பயணிக்கிறது..!
மனிதனின் சிறந்த தியானம்
தூக்கம்..!
ஒரு கனவு நனவாகி விட்டால்..
நாம் காண வேண்டியது
இன்னொரு கனவு..!
உங்களைப் பற்றிய
பிறரது எண்ணம்
அவர்களின் பிரச்சனை
உங்களுடையது அல்ல..!
நம்மிடம் உள்ள ஒரே ஒரு
மிகப் பெரிய சொத்து
நமது மனம் மட்டுமே..
அதைச் சரியாக பயிற்றுவித்தால்
அளப்பெரிய செல்வங்களை
அடைய முடியும்..!
எதையும் பிரதிபலிக்காமல்
படித்துக் கொண்டே இருப்பது
என்பது.. செரிமானம் இல்லாமல்
சாப்பிட்டுக் கொண்டே
இருப்பதை போன்றது..!
வெற்றிகரமான பொய்யனாக
இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும்
போதுமான அளவு
நினைவாற்றல் இல்லை..!
No Comment! Be the first one.