இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும்
பிரம்மச்சாரியம் அவசியம்.
ஏனெனில் உடல் மீதான ஆசை
ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.
மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன்
திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு
மனிதனும் நெறியற்ற கொள்கையைமேற்கொள்கிறான்.
அவசரமாகத் தவறு செய்வதை விட
தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான
தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை,
கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.
உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை,
அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன்
சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக
இருந்தால் நீ வாழ்வில்வெற்றிபெறுவாய்.
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன்
முன்னால் எந்தப் பிரச்சினையையும்
நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ,
அப்பொழுது தவறான பாதையில்
நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ
உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம்.
அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை
அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும்
ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை
என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம்
எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும்
முதல் இடத்தைப் பெறுவதுஎன்று பொருள் அன்று.
வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற
முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற
நினைக்கிறார்களேயொழிய தம்மை
மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில்
ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால்
அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை
செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
No Comment! Be the first one.