முற்கள் நிறைந்த கடினமான பாதைகள்தான்
உன்னை கனிவான இடங்களுக்கு அழைத்து செல்கின்றன.
நீ வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
விதை விழுவது உரமாவதற்கு அல்ல. மரமாவதற்கே…
நீ எதிலும் தோற்பதே இல்லை…
ஒன்று வெற்றி கொள்கிறாய்
இல்லையேல் கற்று கொள்கிறாய்.
உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசு..
உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து பேசு.
உங்களின் நேற்றைய தோல்விகளுக்கான
காரணங்களை நீங்கள் இன்று கண்டறியாவிட்டால்,
நாளைய வெற்றியை நோக்கி உங்களால்
ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது.
கற்கள் ஏற்படுத்தும் வலியைவிட
சொற்கள் ஏற்படுத்தும் வலி அதிகம்.
எனவே தவறான வார்த்தைகள் உங்களின்
பற்களை தாண்டி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
வாழ்க்கையின் சுகமே அதை
சுமப்பதில்தான் இருக்கிறது.
உழைப்பவனையே இறுதியில்
வெற்றி எதிர்கொள்கிறது.
மூச்சு நின்றால் மரணம், அது உன்
முயற்சி நின்ற தருணமாக இருக்கட்டும்
தோல்வியை ஆணியாக நினைத்தால் உறுத்தும்,
ஏணியாக நினைத்தால் உயர்த்தும்.
பொறுமையை இழந்தவன்
வறுமையில் வீழ்வான்.
ஏமாற்றங்களை தவிர்க்க வேண்டுமென்றால்
மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்.
கடந்துபோன காலங்கள் காலாவதியான மருந்தைப் போல
அருந்தினாலும் வீண். அதையே நினைத்து வருந்தினாலும் வீண்.
No Comment! Be the first one.