ஆசைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள்,
எதிர்பார்ப்புகளை மறைத்துக் கொள்ளுங்கள் ,
பேராசை படாதீர்கள் இதுவே வாழ்க்கை வெற்றிக்கான மந்திரம்.
நீங்கள் கவலைப் படுவதாலோ வேதனை பெறுவதால்
உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றம் வந்துவிடப் போவதில்லை
என்பதை அறிந்து செயல்படுங்கள்.
நினைத்தால் நடந்து விடுமா? என்ற ஒரு சீரிய சந்தேகம் எண்ணம் தான்,
சிலரின் வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கிறது.
மனிதனுடைய திறமை பெரிதல்ல.
சந்தர்ப்பமே அவனை பிரகாசிக்கச் செய்கிறது.
ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ஒரு எதிர்பார்ப்பு,
அதே நாளில் முடிவில் ஒரு அனுபவம். இதுதான் வாழ்க்கை.
விழுந்தால் தூக்கி விட யாருமில்லை என்பதை உணர்ந்தவனே,
தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து வைக்கிறான்.
நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான்.
சாதாரன மனிதன் தன் சௌகரியங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.
கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின்
நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்!
அனுபவம் ஓர் நம்பகமான விளக்கு.
அதைத் துணையாகக் கொண்டு நடக்கலாம்.
பேச்சு காலத்தைப் போல் ஆழமற்றது;
மௌனமோ கடல்போல் ஆழமானது.
சூழ்நிலைகளை அனுசரிக்கப் பழகிக் கொண்டால்,
இந்த உலகம் உங்களுக்கு ஏற்ற பூஞ்சோலையாக விளங்கும்.
No Comment! Be the first one.