புகழுக்கு மயங்கினால் போகுமுன் சிந்தனை
அகலுக்குள் அல்லாடும் ஒளியாய்
இகத்தினில் பலருண்டு ஈடற்ற புகழுக்கு
ஈதறி தோன்றுவாய் தமிழாய்!
அசலுக்கும் நகலுக்கும் அதற்கேற்ற மதிப்புண்டு
அறியவே தென்படும் பொருளாய்
வசப்படும் புகழது வாழ்கின்ற ஒருநாளில்
வழிநோக்கி நில்லாது தெளிவாய்!
வினைப்பயன் வீணாக விதிப்படி உனைசேரும்
விரும்பாது நடைபோடு எளிதாய்
தனைக் கூடும் தவறாது தக்கவேபுகழுமே
தனக்குள்ளே தானெண்ணி மகிழ்வாய்!
No Comment! Be the first one.