பெண்ணெனில் பேரழகு பிறிதேதுப் பின்னழகு?
கண்ணும் நாணமுறும் கட்டழுகு சொல்லுகையில்
எண்ணும் கற்பனைக்கு எட்டாது கவியழகு
பெண்ணின்றி மண்ணிருந்தால்
பிறக்காது ஓரழகு!
வாழ்வு அர்த்தமுற வரும்பிறப்பு சிறப்புமுற
மூழ்கும் இன்பமதை முன்னிருத்தும் பெண்ணிளமை
ஆழ்ந்துப் பாரதனழகு அறியாதப் புதிரழகு
வீழ்ந்த கோட்டைபல விவரிக்கும் அதனழகு!
No Comment! Be the first one.