பச்சைக்கிளி கொஞ்சும்
திருமுகப் பட்டுக்கொடி
பற்றும் இடையாட !
பட்டைத்திரு வைரச்
சிறுநுதல் குட்டிப்பிறை
பட்டம் ஒளிவீச !
இச்சைகுடி கொண்டக்
கருநிற கார்குழல்
நட்டைச் சடையாட !
கொச்சைத்தமிழ்க் கொட்டும்
குறு இதழ் கொவ்வைக்கனி
கொத்தில் நகையாட !
கச்சில்குடி வைச்சக்
கனகநகில் வல்லிக்கொடி
கன்னம் தனதாட !
அச்சில்வடி செப்புச்சிலை
அழகுநிற ஆரணங்கே !
ஆடி நீ வருகவே !!
No Comment! Be the first one.