இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் என்று போற்றப்படும் சவரிமுத்து அகஸ்தியர் 1926.08.29 ஆனையூர் பெற்ற எம் மைந்தன் .
இவர் தனது இளமைக்காலத்தில் எமது ஊரில் இருந்து தேசிய,உள்ளூர் பத்திரிகைகள்,வார இதழ்களில் கவிதை, நாடகம், சிறுகதை, நாவல்கள், விமர்சனம் என விரிந்தது இவரது எழுத்துலகு. அத்துடன் பல நூல்களையும் இவர் வெளியிட்டார். கோபுரங்கள் சரிகின்றன, எரிநெருப்பில் இடைபாதை இல்லை , எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள் என்பன சிறந்த படைப்புகள்
இவரின் மண்ணில் தெரியுதொரு தோற்றம் நாவல் 1978ஆம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
மேய்ப்பர்கள் என்ற நாவல் தமிழ்நாடு, இலங்கை அரசுகளின் பரிசுகளைப் பெற்றது. இலங்கை அரசினால் இலக்கிய வித்தகர் விருது, பொற்கிழி என வழங்கப்பட்டது.
நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு நூலுக்கு 1981 இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு மீண்டும் இவருக்கு கிடைத்தது.
இவர் முற்போக்கு எழுத்தாளன் சங்க தலைமைக் குழுவில் இருந்தார்.
இவரால் தான் எழுத்துலகில் எமது
ஆனையூர் மண் முதலாக முதல் பிரகாசமானது என நினைக்கிறேன்.
பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் மதிப்புக்குரிய அமரர் பூபாலசிங்க உட்பட பத்திரிகை ஆசிரியர்கள் , அச்சக உரிமையாளர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு உடையவர்.
பழைய ஈழநாடு பத்திரிகையின்
பிரதம ஆசிரியர் மூத்த தமிழ் பத்திரிகையாளர்
அமரர் எஸ். எம். ஜி கோபாலரத்தினம் (கோபு ) ஜயாவுடன் சில வருடம்
செய்தித் துறையில் பயணிக்க நேர்ந்தது அது மிகப் பெரும் வரம் எனக்கு . அவர் தான் ஆனையூரான் என்று எனக்கு பெயர் கொடுத்தவர், மிக பெருமை இப்போதும்.
அவர் என்னிடம் ஒரு நாள் கேட்டார்
தம்பி நீ ஆனைக்கோட்டை தானே உனக்கு எழுத்தாளர் அகஸ்தியரை தெரியுமா என்று தெரியாது என்றேன்.
வெட்கமான விடையம் தான்.
உண்மையில் எனக்கு யார் அவர் என்று
அதுவரை அவரை பற்றி தேடும் வரை தெரியாது .
இவர் கொமுனிச கொள்கையில் எம் ஊரில் வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் . இறக்கும் வரை மத நம்பிகை அற்றவராகவே இருந்தார்.
இவருக்கு நல்ல நண்பர்கள் மரியாதைக்குரிய அமரர் துரைராசா,லூத்தையா,குலசிங்கம் மாஸ்ரர் போன்ற பலதரப்பட்ட நண்பர்களும் எம் ஊரில் இருந்தனர்.
இவரது எழுத்துகள் பெரும்பாலும் உண்மை சம்பவங்களை அடி கொண்ட எழுத்துகளாகவும் அல்லது நீதி தேடிய
சொல்லாடல்களாகவே அதிகம் இருக்கும்.
இவ்வாறு தான் எமது ஊரில் நடைபெற்ற
சாதியத்தாள் தந்தை மகளைக் கொண்ற சம்பவத்தினால் மனம் நொந்து
எழுதிய கதை பல விமர்சனங்களை எம் ஊரில் உருவாக்கியது. காரணம் உண்மையான பெயர்கள் கதையில் சேர்த்தமை. இது தனிநபர் சுகந்திர,பாதுகாப்பு மிறல் என்ற வரையறையில் தவறு தான்.
அவர் புனைப்பெயர்களை பயன்படுத்தி இருக்க முடியும், ஆனால் அவரிடம் சாதியக் கொடுமையால் ஏற்பட்ட சினம் அந்தளவுக்கு
உச்சமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இனி யாரும் இவ்வாறு செய்யக் கூடாது என்ற எண்ணமும் அவரிடம் இருந்திருக்க வேண்டும்.
அதனால் அவ்வாறு எழுதினாரோ தெரியவில்லை. ஆனாலும் உண்மை பெயர் பயன்படுத்துவது தவறு .
உண்மையில் வெளி உலகில் இது
சாதியை எதிர்க்கும் முற்போக்கு
கதையாக இன்றும் பார்க்கப்படுவது தான் உண்மை பேசு பொருள்.
1986ம் ஆண்டு பின்னர் புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்தார். அங்கு எழுத்தாளர் அமைப்பை பலருடன் சேர்ந்து உருகினார். இன்று அந்த அமைப்பு செயல்படுகிறது.
இவர் எழுத்துகள் இலங்கையிலும் சரி,இந்தியா ,புலம்பெயர் தேசத்திலும்
இன்றும் பேசு பொருளாக இருப்பது
எம் ஊருக்கு பெருமை .
இறை நம்பிக்கையும், அடக்கு முறைக்கு எதிராக ஆயுதப்போராட்டம்
உச்சம் பெற்ற காலம் அப்போது இவர் இரண்டையும் தீவிரமாக எதிர்த்தார்.
புரவலன் ஆனையூரான்.
No Comment! Be the first one.