நாடி வரும்எங்களுக்கு
நலம்புரியும்
தாயே-உன்னைத்
தேடிவந்து
மடிவிழுந்தோம்
தேறுதல் சொல் –
நீயே …!
காடு மலை கடலா நீ-கன்னி மரியாளே..
அந்தக் களங்கமில்லா
வெண்ணிலவா- கன்னி மரியாளே…
பாடுகளை நீக்க வந்த
பரம்பொருளும் நீயே எங்கள்
பாவங்களைப் போக்கிவிடு- பனிமய மலர் தாயே…!
பாழ்நிலமாய் இருந்தவனை
வாழ்நிலமாய்- மாற்றினாய்
ஊழ்வினைகள்அண்டிடாமல்
உன்னமுதை- ஊட்டினாய்
கருணை அன்பை உன்னிரண்டு
கண்களிலே- காட்டினாய்
கன்னிமரியாளே என்னை
நெஞ்சில் வைத்துப்-
பூட்டினாய்…!
ஆனையூரான்
No Comment! Be the first one.