உலகை ரட்சிக்க உண்டானப் பேரொளி
நிலவும் தர்மத்தை நிலைநாட்டும் பெரும்சக்தி
அளவிலா பரந்து அண்டத்தை காத்தருளும்
அன்னை மேரியே அருள்பாலிக்கும் இறைவடிவம்!
மனிதப் பிறப்பதனுள் மண்டும் பெரும்பிழையை
கணித முறைப்படி கண்ணோக்கிக் களையும்
இனிய சக்திதான் இம்மையில் மாதாவும்
கனிய அருளளித்து காக்கின்றாள் நம்மையுமே!
செம்மைப் படுத்திநம் சிறப்பான பிறப்புக்கு
நம்மை வழிப்படுத்தும் நாயகிக்கு ஈடாய்
உண்மையில் ஒருசக்தி உயிரோட்ட மெதுவுமிலை
அம்மை செயல்போற்றி அடிவணங்க வாருங்கள்!
உயிர்வலிக்கு மருந்தவளே உணவதனில் விருந்தவளே
வயிற்பசிக்கும் பல்லோர்க்கும் வற்றாத உணவவளே
துயர்துடைக்கும் தூயக்கை துணை!
ஆனையூரான்
No Comment! Be the first one.