அற்றதோர் மேனி அரியதோர் உயிரும்
பெற்றதோர் அன்னை பேருல கதனில்
மற்ற யாவுயிரும் மாசிலா வாழ்ந்திட
உற்றதோர் மரியே உலகினைக் காப்பவள்!
சுற்றம் சூழல் சூழ்வினை யாற்றல்
கொற்றம் கொடை கொடைகீழ் ஆளுமை
நற்பொழு தறிதல் நானில வளர்ச்சி
முற்றும் ஒர்த்து முறைசெய் வித்தல்!
பல்லுயிர் பேணும் பரம்பொருள் காட்டி
வெல்லு முயிர்க்கு விருப்ப வீடு
செல்லும் நாளில் சீரெனத் தரவே
அல்லால் ஏது அன்னையை விட்டால்!
இல்லா திருக்கும் இன்ப வீட்டில்
உள்ளாள் அன்னை உனையே காக்க
எல்லா சுகமும் ஈவாள் வணங்கு
நல்லாள் மேரி நலந் தருவாளே!
ஆனையூரான்
No Comment! Be the first one.