மாட்சிமை பொருந்திய மாதா மகிமை
மக்களுக் கான ஆட்சி
மின்னும் பொன்னில் மினுக்கும் ஒளியாய்
கண்ணில் தெரியும் காட்சி
கண்ணில் துலங்கும் காட்சியில் விரியும்
கலைத்தாய் மாதா மாட்சி!
மாட்சிமை பொருந்திய மாதா மகிமை
மக்களுக் கான ஆட்சி
ஆட்சியில் புலப்படும் அத்தனை செயலும்
அன்னையைக் காட்டும் சாட்சி!
சாட்சிகள் காட்டும் சாகசம் யாவும்
சத்தியத் தாயின் ஈகை
சாலச் சிறந்த சமத்துவ ஈகை
சந்தன மாதா மேன்மை!
மேன்மை வழியின் மெத்தநற் கதவை
மெல்லத் திறப்பாள் அருளால்
தான்தரும் அருளால் தழைக்க அழைப்பாள்
தன்னரும் பிறப்பினை விழியால்!
No Comment! Be the first one.