ஆண்டாண்டும் ஆண்டுகள்
அவனியில் பிறப்பதும்
ஆண்டதன் இறுதிக்குள்
சென்ற ஆண்டும் செவ்வன் பிறந்தது
நன்றும் நடந்தது
நல்லதல்லா நடந்தது
என்றாலும் இயற்கை
ஏனோ கோபத்தால்
எங்கும் துயரை இழைத்து !
இருபத்து மூன்று இங்கிருந்து நகர
இருபத்து நான்கு
வருகிறது வரவேற்போம்
வருகிற ஆண்டு
வளம்தரும் ஆண்டாம்
வலிகளைக் குறைத்து
நலந்தரும் ஆண்டாம்!
தொழிலில் மேன்மை
தொகைதரும் வணிகம்
எழிலுற நடத்தும்
ஏழையின் விவசாயம்
அழிவிலா வகையில்
ஆக்கும் விஞ்ஞானம்
மொழிவளம் யாவும்
முன்னேற்ற வகையில்!
தரவரும் ஆண்டே
தரணியில் வருக
தன்னி கரற்று தன்னுயர் வெய்த
இரவில் பிறந்த
இனிய ஆண்டே
வருக! வருக!!
வாழ்த்தி மகிழ்கிறேன்
No Comment! Be the first one.