குத்தும் ஊசியிடம் எல்லாம் வாதாடி கொண்டிருந்தால் ஆடை தன் அழகை இழந்து விடும்.
வெட்டும் கத்திரிக்கோலுடன் எல்லாம் வாதாடி நாள் ஆடை தன் வடிவமைப்பை இழந்து விடும்.
சில காயங்கள் நம்மை நேர்த்தி செய்யும் ஆடை போல.
காத்திருக்க கற்றுக்கொள் எல்லாவற்றிற்கும் உரிய ஒரு நேரம் இருக்கிறது.
அவசரப்படுவதால் நிம்மதி தொலையும்
காலம் போடும் கணக்கை இயற்கை தவிர யாராலும் மாற்ற முடியாது.
அதனால் நல்லதை நினை நல்லதை செய் மற்றதை இயற்கை பார்த்துக் கொள்ளும்
மனிதர்கள் நல்ல எண்ணங்களை விரும்புவதில்லை
நல்ல தோற்றத்தை மட்டுமே விரும்புவார்கள்.
நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அவர்களே
உங்களை அதிகமாக காயப்படுத்துவார்கள்.
இந்த உலகத்தில் யாரும் உண்மையானவர்கள்
அல்ல உங்களைப் பெற்ற தாயை தவிர.
இன்பத்திலும் துன்பத்திலும்
நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய
ஒரு உண்மை இந்த நிமிடம் கூட
நிரந்தரம் இல்லை.
தளராத இதயம் உள்ளவனுக்கு,
உலகில் முடியாதது என்று எதுவும் இல்லை.
அன்பு ஒருவருக்கு வாழ்வின் நோக்கத்தை கொடுக்கிறது.
அறிவு அதை அடைவதற்கான
வழியை தருகிறது.
மற்றவர்களுக்காக வாழ்வதும்,
அவர்களுக்காக முயற்சி செய்து
வெற்றி பெறுவதும் தான்
நம்வாழ்வின் தோல்வி
சிறகுகள் நனைந்தால் பறக்க
முடியாது தான்
ஆனால் எந்த பறவையும் மழை வேண்டாம் என்று
நினைப்பது இல்லை,
வாழ்க்கையே போராட்டம் தான்
No Comment! Be the first one.