துன்பம் இல்லாத இன்பமும்..
முயற்சி இல்லாத வெற்றியும்
அதிக நாள் நிலைப்பதில்லை..!
இறப்பதற்கு விஷம் குடிப்பவன்
பிழைத்துக் கொள்கிறான்..
வாழ்வதற்கு மருந்து குடிப்பவன்
இறந்து போகிறான்.. எதுவுமே
நம்ம கையில் இல்லை..
எதுவுமே சரியில்லாத போதும்..
எல்லாம் சரி ஆகிவிடும் என்று
நம்புவது தான் வாழ்க்கை..!
எல்லாவற்றையும் இழந்து விட்டோம்
என்று நினைக்கும் போது..
ஒன்றை மறக்காதீர்கள்..
எதிர்காலம் என்ற ஒன்று உண்டு..!
வருவது வரட்டும் போவது
போகட்டும் என்று இருந்தால்
நிம்மதி நிச்சயம்..!
குறை இல்லாதவன் மனிதன்
இல்லை.. அதை குறைக்கத்
தெரியாதவன் மனிதனே இல்லை..!
நோய் இல்லை என்று மனதில்
உறுதி செய்..
மனம் போல் அமையும் உடல்..!
நிகழ்காலத்தை சரியாக
பயன்படுத்திக் கொண்டால்
எதிர்காலம் நம்மை வரவேற்கும்..!
ஒரு வெற்றி ஒரு தோல்வியை
மறக்க செய்யும்.. ஒரு தோல்வி
பல வெற்றிகளை பெற செய்யும்..
முயற்சித்துப் பார்.. முடியாதது
என்று ஒன்றும் இல்லை..!
அவமானங்களை நினைத்து
அழாதீர்கள்.. உங்கள் அழகான
வாழ்க்கைக்கு அடித்தளமே
அவமானங்கள் தான்..!
கடந்து போக கற்றுக் கொள்..
மாயமான இவ்வுலகில்
காயங்களுக்கு நியாயங்கள்
தேடாமல்..!
வல்லவனுக்கு வல்லவன்
உலகில் உண்டு என்றாலும்..
அந்த வல்லவனையும் மிஞ்சும்
ஆற்றலும் இயற்கை அனைத்துக்கும் உண்டு
No Comment! Be the first one.